சாலை விபத்தில் மரணித்த காதலன்! விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை!

சற்றுமுன் தமிழகம்
poison 1
poison 1

காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வர்தினி என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வர்த்தினியும் உடுமலை பகுதியில் வசித்த ரமேஷ் என்ற மாணவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதில் கடந்த 6ஆம் தேதி ரமேஷ் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த வர்தினி தனது வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வர்தினி விரக்தியில் தனது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்தினிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து வடக்கிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.