கன மழையில் மிதக்கும் மும்பை: விமானம், ரயில் சேவை பாதிப்பு

Published:

mumbai rain - 2026

மும்பை நகரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 12 ஆம் தேதி வரை மும்பை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மோசமான வானிலை கரணமாக மும்பையில், 32 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், நிலைமை கட்டுக் கடங்காமல் போகும் நிலையில் உதவி படை அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img