சமூக வலைத்தளம் மூலம் துர்பிரசாரம்; 60 வயது பெண்மணியைக் கைது செய்யும் ‘ஜெகன்’ அரசு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ranganayakamma

ரங்கநாயகம்மா மீது ஜெகன் சர்க்கார் சீரியஸ். விசாரணை, அரெஸ்ட் நோட்டீஸ்கள் வெளியீடு.

ஏபி யில் ஜெகன் அரசாங்கத்தை இலட்சியமாகக் கொண்டு சாதாரண மக்கள் முதல் உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள் வரை சோஷியல் மீடியாவில் பரப்பிவரும் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு தீர்மானித்துள்ளது.

அதில் ஒரு பகுதியாக இதுவரை எல்ஜி பாலிமர்ஸ் சம்பவத்தோடு கூட இன்னும் சில முக்கிய அம்சங்களின் மீது அரசாங்கத்தின் நடவடிக்கை பற்றி எதிர்ப்பு தெரிவித்து சோஷல் பிரச்சாரம் நடத்தி வரும் வருபவர்கள் மீது சிஐடி, ஐடி குழுக்கள் ஒரு கண் வைத்துள்ளன. கடந்த காலத்தில் போட்ட போஸ்ட்களை கூட கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு தயாராகி வருகிறார்கள்.

ranganayakamma

ஆந்திர பிரதேசத்தில் சென்ற ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின் ஒய்சிபி மீது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் சோஷியல் மீடியாவை மேடையாக கொண்டு விமரிசனங்களை கொட்டி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது என்பதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் பகை கொண்டு ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் விமர்சித்தபடியே பரப்பிவரும் இந்த பிரச்சாரம் தற்போது எல்லை மீறி வருகிறது.

சில சந்தர்ப்பங்களில் அரசியல் தலைவர்களை வழிகாட்டியாகக் கொண்டு சாதாரண மக்களும் உயர் பதவியில் இருப்பவர்களும் கூட இதில் பங்கு பெறுகிறார்கள்.

எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் குண்டூரைச் சேர்ந்த ஒரு அறுபது வயது முதிய பெண்மணி அரசாங்கத்தை சிறுமைப்படுத்தும் விதமாக சோஷியல் மீடியாவில் போஸ்டுகள் போட்டு வருவதைக் கொண்டு பார்த்தால் இந்த விவகாரம் எதுவரை போய்விட்டது என்பதை காண முடியும்.

குண்டூரைச் சேர்ந்த 60 வயது முதிய பெண் ரங்கநாயகி அம்மா எங்கோ விசாகாவில் நடந்த எல்ஜி பாலிமர்ஸ் சம்பவத்தில் அரசாங்கத்தின் அலட்சியத்தை கேள்வி கேட்டு ஃபேஸ்புக் சோஷியல் மீடியாவில் போஸ்டுகள் போட்டு வருவதைப் பற்றி சிஐடி சீரியஸ் ஆகி விட்டது. இதுகுறித்து விசாரணைக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சிஐடி, அரெஸ்ட் செய்யப் போவதாக தெரிகிறது.

மறுபுறம் இந்த விவகாரத்தில் அவர்கள் அந்தப் பெண்மணியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று தீர்மானத்திற்கு வந்துள்ளது. போலீசார் அது குறித்து விசாரித்து வருகிறார்கள். இதில் மல்லாதி ரகுநாத் என்ற மற்றொரு நபரின் தலையீடும் வெளிப்பட்டுள்ளது. அதனால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு யோசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எங்கிருந்து இந்த செய்திகளை ஆபரேட் செய்கிறார்கள் என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

ranganayakamma

எல்ஜி பாலிமர்ஸ் சம்பவத்தில் அரசாங்கத்தின் மீது சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு வரும் ரங்கநாயகி அம்மாவை அரெஸ்ட் செய்யப்போவதாக சிஐடி வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளிப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்தாலும் கண்டுகொள்ளாமல் அரசாங்கத்தின் மீது சோசியல் மீடியாவில் போஸ்டுகளை போட்டு வருவதால் ரங்கநாயகி அம்மாவை அரெஸ்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சிஐடி டிஎஸ்பி சரிதா கூறியுள்ளார்.

மிகவும் சூட்சுமமான அம்சங்கள் குறித்து அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விடும் படியாக பிரச்சாரம் நடப்பதாக சரிதா தெரிவித்தார். இனி எந்த வயதில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் தண்டனை கிடைத்தே தீரும் என்று சரிதா எச்சரித்தார் .

மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கும்படி யார் பிரச்சாரம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று சிஐடி டிஎஸ்பி கூறியுள்ளார்.

முதல் முறை தப்பு செய்பவர்களுக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கும் என்றும் இரண்டாவது முறை தவறு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும் 10 லட்சம் அபராதம் விதிக்கும் என்று சரிதா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.