கொரோனா: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் உயிரிழந்தார்!

சற்றுமுன் திருச்சி
nagarajan

திருச்சி மாவட்டம் புலியூரை சேர்ந்தவர் நாகராஜன். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவராக உள்ளார். காய்ச்சல், சளி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

பின்னர் நேற்று முன்தினம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பிற்பகல் நாகராஜன் உயிரிழந்தார். நாகராஜனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் கடந்த ஜூன் 26-ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த விவசாய பிரதிநிதிகள் 12 பேர்களில் நாகராஜனும் ஒருவர்.

இவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பார்மசிஸ்ட் பணியாற்றும் சரோஜா என்ற மனைவியும், திருமணமாகி சென்னையில் வசித்து வரும் பிரியா என்ற மகளும் உள்ளனர். இவரது இறப்பிற்கு அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புலியூர் நாகராஜன் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கும், தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும் என ஜிகே வாசன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.