சாத்தான்குளம் விவகாரத்தில் பொய்ச் செய்தி, படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை!

சற்றுமுன் சென்னை தமிழகம்
sathankulam son and father
sathankulam son and father

சாத்தான்குளம் சம்பவத்தில், உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை, பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டி விடும் வகையில் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப் படுவதாகவும், அவ்வாறு தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறு, வெட்டுக் காயங்களுடன் ஒருவரது படங்களைப் பகிர்ந்து அது சாத்தான் குளம் சம்பவ படம் என்று குறிப்பிட்ட இணைய தளம் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

சாத்­தான்­கு­ளம் சம்­ப­வத்­தில், உயி­ரி­ழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகி­யோர் உடம்­பில், நெஞ்சு, கழுத்து உள்­ளிட்ட இடங்­களில், கொடூ­ரமான வெட்­டுக்­கா­யங்­கள் இருப்­பது போன்ற படங்கள் மக்­கள் செய்தி மையம் என்ற இணையதளத்­தில் வெளி­யா­கின. இது­குறித்து விசா­ரிக்க வேண்­டும் என சி.பி.சி.ஐ.டி., போலீ­சா­ருக்கு புகார்­கள்
சென்றன.

இதை­ய­டுத்து ஜெய­ராஜ், பெனிக்ஸ் பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யு­டன், இணை­ய­த­ளத்­தில் வெளி­யான படங்களையும் போலீ­சார் ஒப்­பிட்டுப் பார்த்­தனர். அதில் அந்தப் படங்­கள் போலி­யானவை என தெரி­ய­வந்­தது.

பொது­மக்­களிடம் அமை­தியை சீர்­கு­லைக்­கும் வகை­யில், அந்தப் படங்­கள் சித்­த­ரித்து வெளி­யிடப்­பட்­டுள்ளன என்றும், இந்தப் படங்­கள் வழக்­கின் விசாரணைக்கு தடை­யாக இருக்கும் என்­ப­தால், படத்தை வெளி­யிட்ட இணை­ய­த­ளம் மீது வழக்­குப் ­ப­திவு­ செய்­துள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைக்கு ஆஜ­ராக வேண்­டும் என இணை­ய­த­ளத்­தின் ஆசி­ரி­ய­ருக்கு போலீஸார் சம்­மன் அனுப்பி­யுள்­ளதாகவும், உள்­நோக்­கத்­து­டன் சித்­தரிக்­கப்­படும்
படங்­க­ளு­டன் பொய்ச் செய்தி வெளி­யிடு­வோர் மீது, சட்ட ரீதி­யாக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்படும் என்­றும் சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்­ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.