spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கதைகள்சிறுகதை : காலமிட்ட கட்டளை!

சிறுகதை : காலமிட்ட கட்டளை!

- Advertisement -
corona chennai

சிறுகதை: காலமிட்ட கட்டளை!
மீ.விசுவநாதன்

“பேத்தி ஸ்ரீவித்யாவோட கல்யாணப் பத்திரிக்கையை ஆசார்யாள்ட்ட சமர்ப்பணம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிண்டு வாங்கோ.”

“வர “தை” மாசம் வெள்ளிக் கிழமை புறப்பட்டுப் போயிட்டு வரோம் அப்பா. ஞாயித்துக் கெழமை துவாதசி. அன்னிக்கி ஆசார்யாளுக்கு பீக்ஷாவந்தனம் பண்ணிட்டு அப்படியே பத்திரிக்கையையும் சமர்ப்பணம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிண்டு வந்துடறோம்”

“சரி…தம்பதிகளாப் போயிட்டு வாங்கோ”

நேர்லதான் போணுமா…குரியர்ல அனுப்பினாப் போறாதா”

“என்னடி பத்மா இப்படி கேக்கராய்?..ஆசார்யாள நேர்ல பார்த்து நமஸ்காரம் பண்ணிட்டு வரத்துக்கு இதுஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லையா…ஒரு ரெண்டு நாள்…போயிட்டு வந்துடலாம்”

“சரி…என்னோடு வார்த்தைக்கு என்னிக்குத்தான் மதிப்பு இருந்தது இந்தாத்துல..சீக்கரமா போயிட்டு வந்து எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுக்கணும் அதுக்குத்தான் சொன்னேன்….”

கவலைபடாதே எல்லாம் நன்னா நடக்கும்..இப்பெல்லாம் பத்திரிகையை போஸ்ட்லயோகுரியர்லயோ அனுபிட்டு…அப்பறமா போன்லதான் சொல்லறது வழக்கம்….”

அடா அடா…இப்ப நன்னாச் சொல்லுவேள்…எங்காத்து மனுஷாளுக்குக் குரியர்ல அனுப்புவேள்..ஒங்காத்துக் காராளுக்குக் கார்லபோய்க் குடுக்கனும்னு தலைகீழா நிப்பேள். ஒங்களத் தெரியாதா எனக்கு”

சரி…இந்த ரகளைய அப்பறமா வச்சுக்கலாம்…இப்ப ஊருக்குப் போயிட்டு வரலாம்.. சந்தோஷமா வா…”

“ஆஹா..என்ன அழகான இடம். மலையும் நதியும் பாக்கவே மனசு குளுந்து இருக்கு”

சீக்கிரம் வா…ஆசார்யாள் வந்துருவர்”

“வா..பத்மா…ரெண்டுபேரும் சேர்ந்து பத்திரிக்கையை சமர்ப்பணம் பண்ணி நமஸ்காரம் பண்ணுவோம்”

ரொம்ப சந்தோஷம்ப்பா…உங்க பொண்ணுக்கா கல்யாணம்….சித்திர மாசமா …இன்னும் மூணு மாசம் இருக்கு. நன்னா ஆசீர்வாதம் பண்றேன்..தம்பதிகள் சிரேயஸா இருப்பா…கல்யாணத்த ஆடம்பரமாப் பண்ணாதேங்கோ….ஒங்களுக்கு நெருங்கின பந்துக்கள மட்டும் ஒரு இருபது முப்பது பேர் போருமே…வைதீகம் முக்கியம்..அத விடக்கூடாது.. இல்லாத மனுஷாளுக்கு ஏதாவது ஒங்களால முடிஞ்ச தர்மம் பண்ணுங்கோ..அம்பாள தரிசனம் பண்ணிட்டுப் போயிட்டு வாங்கோ”

சரி..குருநாதா…”

இந்தா…கல்யாணக் கொழந்தைகளுக்கு ஆசீர்வாதம் பண்ணி ஆசார்யாள் கொடுத்த பிரசாதம்..வங்கிக்கோ பத்மா.”

“அம்பாள் கும்குமம்,  மந்திராக்ஷதை… வேஷ்டி, புடவை… எல்லாம்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு…”

“கல்யாணத்துக்கு இருபது முப்பதுபேர் போறுமா?… ஆசார்யாள் சொன்னா ஒங்களுக்கு வேத வாக்கு… முப்பதுபேருக்கு மட்டும் பத்திரிக்கையைக் கொடுத்துட்டு போரும்னு வைசுடாதேங்கோ…நமக்கு இருக்கறது ஒரு கொழந்தை. செய்யறத நன்னாச் செய்யணும்… இல்லைனா… ஆத்துல ரேழில வச்சு கல்யாணத்த முடிச்சுக்கலாம். வந்தவாளுக்கு அரை டம்ளர் காப்பி குடுத்து அனுப்பிடலாம் போறுமா”

எதுக்கு இப்ப கோபம்…ஊருக்குப் போய் ஒன்னோடு ஆசைப்படியே பண்ணலாம்…கவலைப் படாதே…”

என்னடா…கண்ணா… கல்யாணப் பத்திரிகை வந்தது…இப்படி நெருங்கின உறவுக்கே போஸ்ட்ல அனுப்பிருக்கையே…நேர்ல வரப்படாதோ…நாங்க வந்தோமே…சொந்த மாமாஅத்தைய இப்படியா கூப்புடுவா?…எங்களுக்கு மரியாதை முக்கியம்.. எங்களோடு ஆசீர்வாதத்த இப்படியே சொல்லிக்கறேன்”

கோவிச்சுக்காதேங்கோ மாமா…நான் ஒரே ஆளான்னா அலையறேன்…முடிஞ்சா வரேன்…அதுதான் நிச்சய தாம்பூலத்தன்னிக்கே சொன்னேனே…நீங்களும் ஆமாம்டா இந்தக்காலத்துல கிராமம் மாதிரி வீடு வீடாப் போகமுடியாது…போஸ்ட்ல பத்திரிக்கையை அனுப்பினாலே போரும்னு சொன்னேளே….ஒங்க சௌகர்யம்போலச் செய்யுங்கோ…”

“யாரு..ஒங்க மனுஷாதானே…. ஆவலாதிப் பிராம்மணா….”

“சரி..சரி.. விடு.. கல்யாணம்னா ஆயிரம் இருக்கும்”

இதபாருங்கோன்னா…என்னோடு தங்கை இங்க அடையார்லதான் இருக்கா. ஒருநடை போய் கூப்புட்டு வந்துடுவோம். இல்லைனா..அவளோடு ஆத்துகாரர் என்ன நேர்லவந்து கூப்படலைன்னு வீண் ஆவலாதி வரும்.”

“பாழாப்போற சீனாக்காரன் பண்ணின வேலை… ஊரெலாம் கொரானாவாம்… வாயப்பொத்திக்கோ, மூக்க மூடிக்கோ, கைய அலம்பு, கால அலம்புனு ஒரே களேபரம். மார்ச் 2020ல ஆரம்பிச்ச கலாட்டா ஏப்ரல்2020ல நம்மாத்துக் கல்யாணம்வரை வந்தாச்சு. கல்யாணம் மண்டபத்துல இல்ல. ஆத்துலதான். சாப்பாடு கிளப் ஹவுஸ்ல…”

பத்மா….நம்ம கொழந்தை கல்யாணம் ஆடம்பரம் இல்லாம எளிமையா நம்ம பந்துமித்திரர்கள், சம்மந்தி மனுஷான்னு ஒரு நாப்பது பேரோட நன்னா நடந்தது. .ஒரு ஆவலாதி இல்லை…கணேச ஐயர் சமையல்பண்ணிக் கொண்டு வந்துட்டார். நம்ம பிளாட் செக்யூரிட்டிவேலைகாரான்னு மொத்தமா அம்பத்தஞ்சுஅறுபது பேருக்குச் சாப்பாடு…சம்மந்தி மனுஷாளுக்கே சந்தோஷம்..எல்லாம் ஆசார்யாள் கிருபை..மகான்கள் வாக்கு பொய்க்குமா?”

ஆமாம்….காலைல முஹூர்த்தம் முடிஞ்சதும் எல்லாருக்கும் ஒரு டம்ளர்ல என்னவோ கொடுத்தாளே! பானகமா?”

“கபசுரக்குடி நீர்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe