ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!

Published:

madurai rajaji hospital
madurai rajaji hospital

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை மருத்துவக் கல்லூரியில் நாள்தோறும் 1500 முதல் 2000 மாதிரிகள் மத்திய ஆய்வு தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டு வருகிறது.

ஆய்வக முடிவுகள் காலை 10.00 மணி முதல் 04.30 மணி வரை நேரில் பெற்றுக் கொள்ளும் வசதியானது தற்போது காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக முடிவுகளை நூலகம் அருகே உள்ள இடத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ,ஆன்லைனில் பரிசோதனை முடிவுகளை பார்க்கும் வசதியும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஒருவரது பெயர், வயது , மற்றும் செல்பேசியின் கடைசி 5 இலக்க எண்களை உபயோகித்து பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி தெரிவித்துள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img