கொரோனா: இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகருக்கு தொற்று!

உலகம் சற்றுமுன்
jabhar

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகர் ஜாபர் மிர்சாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானிலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் பிரமுகர்களும், பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகர் ஜாபர் மிர்சாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ட்விட்டர் பக்கத்தில் அவர் இத்தகவலை உறுதி செய்துள்ளார். தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அதே நேரத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.