December 6, 2025, 3:21 AM
24.9 C
Chennai

ரூ.15,000 கோடி செலவில் குடிநீர் வினியோயகத்திட்டங்கள்-கவர்னர் உரையில்..

1083255 ravione33 - 2025

ரூ.15,000 கோடி செலவில் குடிநீர் வினியோயகத்திட்டங்கள்,மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழில் உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறி கவர்னர் ஆர்.என்.ரவி பேசத்தொடங்கினார். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கவர்னர் ரவியின் உரையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர், அமளியில் ஈடுபட்டனர். கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். கவர்னரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் வருகை தந்தனர்.

மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிப்பு தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி சட்டப்பேரவையில் ஆர்.என்.ரவி உரையாற்றினார் அவை வருமாறு:-

புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது .பருவமழையையும், புயலையும் சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது .தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்துரையின தற்கால தேவைக்கேற்ப ஐடிஐ-களில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவது தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு வெற்றிக்கரமாக நடத்தி முடித்து உள்ளது. புத்தொழில் திட்டத்தில் ரூ30 கோடியை பட்டியிலன மக்களுக்கு ஒதுக்கி இருப்பது மிகச்சிறந்த முன்னெடுப்பு ,வளர்ந்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை தேவை.

காலை உணவு திட்டத்தால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். தமிழகத்தின் 3-வது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ.600 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.15,000 கோடி செலவில் குடிநீர் வினியோயகத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிப்பை வெளியிட்டார். 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும். கீழடி அருங்காட்சியகம் போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “42,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது” புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரிப்பு , சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது .

10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என அரசு கருதுகிறது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிப்பை வெளியிட்டார். வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என தனது உரையை நிறைவு செய்தார் கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் ஆர்.என். ரவி ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை, சபாநாயகர் அப்பாவு தமிழில் கூறினார்.

1083247 ravi33 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories