கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர்..

Published:

Tamil News large 3214065 - 2026

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழில் உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறி கவர்னர் ஆர்.என்.ரவி பேசத்தொடங்கினார். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கவர்னர் ரவியின் உரையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர், அமளியில் ஈடுபட்டனர். கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
500x300 1819035 assembly2 - 2026

கவர்னரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் வருகை தந்தனர்.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். நாளை சட்டசபை மீண்டும் கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img