சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
CBI
CBI

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, சிறப்பு குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையில் விசாரணை குழு அமைத்த‌து சிபிஐ.,! இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு
  • தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார் நீதிபதி
  • ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
sathankulam son and father
sathankulam son and father

சாத்தான்குளம் வர்த்தகர்களான தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது இந்த நிலையில், வழக்கு குறித்து விசாரிக்க 7 அதிகாரிகள் நாளை தமிழகம் வர இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து பலகட்ட உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசுத்தரப்பில், இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், தலைமை காவலர் ரேவதி உட்பட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது. 

மேலும்,  கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட உள்ளது, தற்போது வரை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. 

இதை அடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,”ஜூலை 7ஆம் தேதியே தில்லி சிபிஐ அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதன் நகல் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணைப்பிரிவின் 7 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் தமிழகம் வந்து விசாரணையை தொடங்க உள்ளனர் என்றும், விசாரணைக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிபிஐ, அல்லது சிபிசிஐடி எதுவாக இருந்தாலும் கைது செய்யப்பட்டவர்களை கைது செய்த முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

வழக்கு குறித்து சிபிசிஐடி தரப்பில் முழுமையான விசாரணை அறிக்கைகளை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

மேலும், அச்சு, காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வழக்கு விசாரணைக்கு இடையூறாக செய்தி வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

சாத்தான்குளம் விவகாரத்தில், சிபிஐ., பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.