கொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா!

உலகம் சற்றுமுன்
virus

கஜகஸ்தானில் புதிய வைரஸ் பரவி வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்து வரும் தகவலை கஜகஸ்தான் நாட்டு அரசு மறுத்துவருகிறது.

கஜகஸ்தானின் உள்ள சீன தூதரகம் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டது. அதன்படி, உலகமே தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பற்றியும் அதன் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்து வருகிறது.

ஆனால், கஜகஸ்தானில் புதிய வைரஸ்(நிமோனியா – Pneumonia virus) பரவி வருவதாக தனியார் உள்ளூர் செய்தி சேனல்கள் கூறிவருவதாக தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த புதிய வைரஸானது, கொரோனா வைரஸை விட மோசமானது. இதன் இறப்பு விகிதம் கொரோனா வைரஸின் இறப்பு விகிதத்தை விட அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து ஏன் இன்னும் அதிகாரபூர்வ தகவலோ, எச்சரிக்கையா விடப்படவில்லை என தெரியவில்லை என பதிவிட்டுள்ளது.

இந்த வைரஸ்ஸால் நிமோனியா காய்ச்சலில் 1,700-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதால், கஜகஸ்தானில் வசிக்கும் சீனா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த நாடு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கஜகஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் ‘வி-சாட்’ சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கஜகஸ்தான் முழுவதும் இதுவரை அறியப்படாத நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. அந்தக் காய்ச்சல் ஏற்பட்டவா்கள் உயிரிழக்கும் விகிதம், கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் விகிதத்தைவிட மிக அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் அந்த மா்மக் காய்ச்சலுக்கு இதுவரை 1,772 பேர் உயிரிழந்துள்ளனா். கடந்த மாதம் மட்டும் அந்த நோய் பாதிப்பு காரணமாக 628 பேர் உயிரிழந்தனா்..

அந்த காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குறித்து, கஜகஸ்தான் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.

கஜகஸ்தானின் 3 மாகாணங்களில், கடந்த மாத மத்தியில் மட்டும் சுமார் 500 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த நாட்டில் தங்கியுள்ள சீனா்கள் அனைவரும், மா்ம நிமோனியா காய்ச்சல் விவகாரத்தில் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அந்த நோய்த்தொற்றிலிருந்து அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:

கஜகஸ்தானில் உருவாகியுள்ள புதிய நோய்த்தொற்று பரவல் குறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள முயன்று வருகிறோம். அந்த நோயைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.

சீனாவிலுள்ள ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தையொட்டி கஜகஸ்தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மா்ம நிமோனியாக் காய்ச்சல் குறித்து சீனா வெளியிட்டுள்ளது பொய்யான தகவல் என்று கஜகஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வகை நோய்த்தொற்று குறித்து சீன அரசு ஊடகங்களில் வெளியான தகவல் தவறானதாகும். பாக்டீரியாக்கள், பூஞ்சான்கள் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் மட்டுமன்றி, புதிய வகை வைரஸ் பரவல் விவகாரத்திலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படியே செயல்பட்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கஜகஸ்தான் அரசு இந்த புதிய வைரஸ் பற்றிய சீன தூதரகத்தின் தகவலை மறுத்துள்ளது. புதிய வைரஸ் பற்றி சீன ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தவறானவை .’ என கஜகஸ்தான் நாட்டு மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சா் அலெக்ஸே சோய் கடந்த புதன்கிழமை கூறுகையில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் பேர் புதிய நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், உயிரிழந்தவா்கள் உள்ளிட்ட விவரங்களை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடவிருப்பதாகவும், இதுதொடா்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவசியமில்லை என்றாலும் அதனைத் தெரிந்துகொள்வது பொதுமக்களின் உரிமை என்றும் அவா் கூறியதாக கஜகஸ்தானின் சா்வதேச செய்தி நிறுவனமான ‘கஜின்ஃபாா்ம்’ தெரிவித்திருந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கஜகஸ்தானில் 54,747 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 1,726 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்கு 264 பேர் உயிரிழந்துள்ளனா்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.