ஆண்களுக்கான அற்புத குறிப்பு!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kirai

ஆண்மை அதிகரிக்க கீரைகள்

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தொட்டாற் சுருங்கி இலையை 15 கிராம் எடுத்து அரைத்து பாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட ஆண்மை பெருகும்.

முள்ளங்கிக் கீரை சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இருவேளையும் உணவுக்குப்பின் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

முள்ளங்கிக் கீரைச் சாற்றையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

அரைக்கீரையை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் ஆண்மையைப் பெருக்கி, காமத்தை அதிகப்படுத்தும்

உயிரணுக்கள் பெருக மாதுளை ஓடு:

மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிடண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய் வைக்கவும்.

நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக்கணக்கில் பெருகும்.

வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும்.

தாது விருத்தி தரும் பால்

தேவையானவை:

பால் – 1 கப் (காய்ச்சியது)

பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 5

பனங்கற்கண்டுத்தூள் – 2 டீஸ்பூன்

மிளகு – 4

ஏலக்காய் – 1

சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் பாதாம், முந்திரி பிஸ்தா, மிளகு, ஏலக்காய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் பனங்கற்கண்டுத்தூள், சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். பாலுடன் அரைத்த தூளை கலந்து இரவில் உணவுக்குப்பின் பருக தாது விருத்தியாகும். ஆண்மை பெருகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.