ஆர்செனிக்கம் ஆல்பம் மாத்திரைகள் இலவசம்!அதிமுக அறிவிப்பு!

சற்றுமுன் தமிழகம்
arcanisam albam c

அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், ஹோமியோபதி மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, அதன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, முதல்வர் பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரை படி, கொரோனா எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், ஹோமியோபதி மருந்தான ஆர்செனிக்கம் ஆல்பம் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.

இதை காலையில், மூன்று மாத்திரைகள் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். 5 வயதுக்குள்ளப்பட்ட குழந்தைகள், இரண்டு மாத்திரைகள் மட்டுமே சாப்பிட வேண்டும். மருந்து உட்கொள்ளும் நாட்களில் டீ, காபி மற்றும் மது பானங்கள் அருந்தக்கூடாது.

இந்த மாத்திரைகள் வேண்டும் என்றால், கரூர், 96290 08822, அரவக்குறிச்சி, 95143 55559 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.