இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை: ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar

இறைவனுக்கு எதையாவது காணிக்கையாக அளிக்க வேண்டும் என்று நினைத்தான் அவருக்கு எதைக் கொடுப்பது என்று கேள்வி அவனை வாட்டியது.

நீண்ட நேரம் அதைப் பற்றி சிந்தித்து இறைவனுக்கு பசுபதி என்றும் பெயர் உண்டு எல்லா ஜீவராசிகளுக்கும் அவரே அதிபதி என்பதே இதன் பொருள். எனவே மிருகத்தை அவருக்கு அர்ப்பணிப்பது தான் பொருத்தம் என்று முடிவுக்கு வந்தான்

எந்த மிருகத்தை கொடுப்பது என தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் வெகுநேரம் ஆலோசித்து என்னிடம் என்ன இருக்கிறது என்பது தெரியுமா? உன்னிடத்தில் எனக்குள்ள பக்திதான் என்று கூறினான்.

பின்பு அவன் பசுவை கொடுக்கிறேன் என்றான் தன்னைப் பார்த்து சிவன் அந்த பசுவின் விசேஷமான தன்மை என்ன என்று கேட்பதாக நினைத்து கொண்டு அளவற்ற ஆனந்தம் என்னும் பாலை கொடுக்க வல்லது என்று தெளிவுபடுத்தினான்.

எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அது பாலைச் சுரக்கும் என்று ஆச்சரியத்துடன் கேட்பதாக கொண்டு, அது மீண்டும் மீண்டும் சுரந்து கொண்டே இருக்கும் என்று அவன் தனது பதிலை சொல்ல, அந்தப் பசு இங்கே வசிக்கிறது என்பதை சிவனின் அடுத்த கேள்வியாக இருக்கும் என்று கருதிய அவன் தங்களுடைய திருப்பாதம் ஆகிய கொட்டிலில் தான் அது வசிக்கிறது என்று கூறினான்.

sivan 1

பிறகு அந்த பசுவிற்கு கன்றுகுட்டி உள்ளதா என்ற கேள்விக்கு பதில் சிவன் எதிர்பார்ப்பார் என்று தோன்றியது ஆமாம் நல்ல ஒழுக்கம் என்ற கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது சிவா நீ பசுபதி அல்லவா என்னிடம் இந்த பசு மட்டுமே உள்ளது கருணை கூர்ந்து தாங்கள் இதை ஏற்றுக்கொண்டு அதை காப்பாற்ற வேண்டும் என்று கூறி தன் பிரார்த்தனையை முடித்தான்.

வாஸ்தவத்தில் ஒரு பக்தனிடம் இருந்து நமக்கு வேண்டியது என்று சிவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை இருந்தாலும் பக்தன் அன்புடன் அர்ப்பணிக்கும் எந்த ஒரு பொருளையும் இறைவன் கனிவுடன் ஏற்றுக்கொண்டு தனது அருளை வாரி வழங்குகிறான்.

krishnar 1

இதில் பக்தியைத்தான் அவன் பசு என்றான் இறைவனின் பாதங்களிலே அது சரணாகதி அடைகிறது என்றான் அது ஆனந்தம் எனும் பாலை சுரக்கும் அதற்கு ஒழுக்கம் என்ற கன்றுக்குட்டி பிறக்கும் என அவன் உருவகப்படுத்தினான்

இதைத்தான் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரிசுத்தமான இதயம் கொண்ட ஒரு பக்தன் அன்புடன் எனக்கு அளிக்கும் ஒரு இலையையோ ஒரு புஷ்பத்தையும் ஒரு பழத்தையோ அல்லது தீர்த்தத்தையோ நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.