சுஷாந்த் மரணம்.. பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன்: பிரபல நடிகையின் அதிரடி முடிவு!

Published:

நான் பேசிய வீடியோவை பார்த்த மும்பை போலீஸார்,

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தான் வெளியிட்ட கருத்துகளை நிரூபிக்க முடியாவிட்டால் தனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இளம் நடிகர் சுஷன்ட் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகில் இருந்து வரும் நெபோடிசமே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

7024ccb287af65d09de07b171deeff66 - 2026

இந்த கருத்தை வலியுறுத்தி நடிகை கங்கனா 2 வீடியோக்கள் வெளியிட்டிருந்தார்.. அதில், ” திறமை, பட வெற்றிகள், புத்திசாலித்தனம் இருந்தும் சுசாந்துக்குரிய மரியாதையை பாலிவுட் அளிக்கவில்லை. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர் எப்படி மனரீதியாக பலவீனமாக இருக்க முடியும்? காய் போ சே படத்தில் அவருடைய திறமையை ஏன் யாரும் பாராட்டவில்லை? கல்லி பாய் போன்ற மோசமான படம் ஏராளமான விருதுகளைப் பெறுகிறபோது சீச்சோர் போன்ற நல்ல படம் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்? “

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

9792f71198d08ea4dd2ccd29c4a021f9 - 2026
 
“சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது திரைப்பட மாபியாக்களால் அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட படுகொலை எனவும், மேலும் பாலிவுட் திரையுலகம் மற்றும் மீடியாக்களிடம் இருந்து சுஷாந்த் எதிர்கொண்ட அழுத்தங்களும், தவிர்ப்புகளுமே தற்கொலைக்கு காரணம்” என கங்கனா சாடியிருந்தார்..

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் எதையும் வெளிடக்கூடிய ஆள் நான் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், நான் பேசிய வீடியோவை பார்த்த மும்பை போலீஸார், அதுகுறித்து விசாரிக்க என்னை அழைத்தனர். நான் மணாலியில் இருந்ததால் எனது அறிக்கையை பெற யாரையாவது அனுப்புங்கள் எனக் கூறினேன். ஆனால் அதன்பிறகு என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்னால் நிரூபிக்க முடியாத ஒன்று குறித்து நான் பொதுவெளியில் நான் பேசமாட்டேன். அப்படி என்னால் நிரூபிக்க முடியாவிட்டால் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன். நான் அதற்கு தகுதியற்றவளாகக் கருதிக் கொள்வேன் என்று கோபமாக பேசியுள்ளார்.

 

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img