ஆட்சியில் இல்லாததால்… தொண்டர்களின் சொத்துகளையே அபகரிக்கத் தொடங்கிட்டுது..!

sathyamoorthi-bhava
sathyamoorthi-bhava

காங்கிரஸ் தலைமை மத்தியில் ஆட்சியில் இல்லாததால் நாட்டை கொள்ளை அடிக்க வழி இல்லாததால் தனது தொண்டர்களின் சொத்துக்களையே ஆட்டையை போட தொடங்கிவிட்டது

தமிழ்நாடு காங்கிரசின் ரூ.20 ஆயிரம் கோடி சொத்து ஸ்வாகா..! ராகுல் காந்தி மீது பகீர் கிளப்பும் புகார்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையை ராகுல் காந்தி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1950களில் தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துகள் வாங்கப்பட்டன. மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் செயல்பட கட்டிடம் கட்டுவதற்கான நிலம், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உதவிகள் செய்ய வருமானம் தேவை என்கிற அடிப்படையில் சில வணிக ரீதியிலான நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈடுபட்டது. குறிப்பாக 1958ம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டை தொடர்ந்து சென்னையில் மிக முக்கியமான தேனாம்பேட்டையில் ஏராளமான நிலம் வாங்கப்பட்டது

அந்த இடத்தில் தற்போது காமராஜர் அரங்கம் மற்றும் சில வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காமராஜர் அரங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. மற்ற இடங்கள் மற்றும் வணிக அமைப்புகளை குத்தகை மற்றும் வாடகை அடிப்படையில் பிறர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு ஆண்டு தோறும் பல கோடிகளில் வருமானம் வருகிறது. மேலும் காமராஜர், சத்தியமூர்த்தி காலகட்டத்தில் வாங்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கான சொத்துகள் தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சென்னையில் மட்டும் சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், கட்டிடங்கள், வணிக அமைப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சொத்துகளை நேரடியாக நிர்வகிக்க காமராஜர் காலத்திலேயே அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் யாரோ அவர் தான். இது தவிர மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில் சிஆர் கேசவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தற்போடு டிரஸ்டிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.
தேனாம்பேட்டையில் சுமார் 20 முதல் 50 ஏக்கர் அளவிலான இடம் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது. இந்த இடத்தில் தான் தற்போது ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மும்பையை சேர்ந்த பில்டர் ஒருவருடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த ஒப்பந்தத்தை ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் என்பவர் மேற்பார்வையில் செயல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது காமராஜர் காலத்தில் வாங்கிய காங்கிரஸ் சொத்துகளை ராகுல் காந்தி நேரடியாக தனது தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துகிறார் என்கிற புகார் எழுந்துள்ளது.

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து சோனியாவும், ராகுலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்று திருப்பி அனுப்பியதாக பகீர் புகாரை ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நேசனல் ஹெரால்டின் சுமார் 2 ஆயிரம் கோடி சொத்துகளை சோனியா தனது குடும்பத்தின் பெயருக்கு மாற்றியதாக ஒரு வழக்கு உள்ளது. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சுமார் 20ஆயிரம் கோடி சொத்துகளையும் அறக்கட்டளையின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்து தன்னுடைய குடும்ப நலனுக்காக ராகுல் காந்தி பயன்படுத்துவதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.

உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தில் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட மும்பை கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளாரா? அறக்கட்டளை நிர்வாகிகளை 2009ல் அழைத்து சோனியாவும், ராகுலும் கையெழுத்து பெற்ற ஆவணங்கள் என்ன? என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

மேலும் 20ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை சோனியா காந்தி குடும்பம் தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துவது எப்படி சரியாகும்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது என Asianet news பதிவு செய்துள்ளது.

குறிப்பு; வாக்காளர்களே இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு ஏன் இப்படி அடித்துக்கொள்கின்றனர் என்ற,எனது நீண்டநாள் சந்தேகத்திற்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சோனியா குடும்பம் விட்டுக்கொடுக்காததற்கும் இதுதான் காரணமோ.? காமராஜரும்,கக்கனும் பசிக்கு கூட சாப்பிடாமல்,ஏழைகளிடம் கை ஏந்தி வாங்கிய நிதியில் சேர்ந்த சொத்துக்கா இன்று இந்த நிலை..?

  • ராஜப்பா (சமூக வலைத்தளப் பதிவுகளில் இருந்து…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories