காங்கிரஸ் அறக்கட்டளை முறைகேடு… வருமான வரி விசாரணை தேவை: பாஜக., தலைவர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bjp-l-murugan
bjp-l-murugan

காங்கிரஸ் அறக்கட்டளையில் நடைபெற்றுள்ள முறைக்கேடு குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்: தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியிர்க்கிறார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்… சென்னை காமராஜர் அரங்கம் அருகே உள்ள மைதானம் காமராஜரால் உருவானது. இந்த அறக்கட்டளை இடத்தை மும்பையை சேர்ந்த சில கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும். தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து விவகாரத்தில் உண்மையை தமிழக காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழர்களின் வாழ்வியலில் ஒன்றிப்போன கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப் படுத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை அனைத்து கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு பின்புலமாக உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் கட்சியில் இந்துக்கள் இருப்பதாக கூறும் தி.மு.க. இந்துக்களுக்கு பிரச்சனை வரும் போது போராட முன்வர வேண்டும்.குள்ளநரி கூட்டம் யார் என்பதை ஆர்.எஸ்.பாரதி தான் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.