சுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம்: ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

23. சிக்கனம் சிறப்பான குணம்!

செய்யுள்:

இதமேவ ஹி பாண்டித்யம் சாதுர்யமிதமேவ ஹி|
இதமேவ சுபுத்தித்வம் ஆயாதல்பதரோ வ்யய:||

– மஹாபாரதம்

பொருள்:

வரவை விட செலவு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதே அறிவுடைமை. அதுவே சாமர்த்தியம். அதுவே நற்குணம்.

விளக்கம்:

ஒரே ஒரு கருத்தையே திடமாக கூறுகிறார் இந்த செய்யுளில். அனாவசிய செலவு செய்யக்கூடாது என்பதே அது. இருப்பதைக் கொண்டு வாழக் கற்க வேண்டும். பொருளாதார நலிவால் வீழ்ந்துபோன நிறுவனங்களும் (என்ரான், ஆர்தர் ஆண்டர்சன் போன்றவை),  நாடுகளும் (கிரீஸ் போன்றவை) மனிதனுக்குப் பாடம் புகட்டுபவை. 

இது சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் மிக உயர்ந்த செய்தி.

பொருளாதாரப் பிரச்சனைகளே பல கவலைகளுக்கும் மூலம். கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட செய்திகளைப் படிக்கும்போது தான் இந்த சுபாஷிதத்தின் அருமை புரிகிறது. தனிமனிதன், குடும்பம், நிறுவனம், உலக நாடுகளின் பட்ஜெட்… எதை எடுத்துக் கொண்டாலும்  வரவுக்குள் செலவு என்ற இந்தக் கருத்து பொருந்தும்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தினக் கணக்கு எழுதும் பழக்கம் முன்பெல்லாம் வீடுகளில் பலருக்கும் இருந்தது. அவசியமானவை,  அநாவசியமானவை என்று செலவுகளை சரி பார்ப்பதற்கு உதவும் வழிமுறை அது. பட்ஜெட்டுக்கு ஏற்ற வாழ்க்கை,  இருப்பதைக் கொண்டு குடும்பம் நடத்துவது… போன்றவை இந்திய இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை. சேமித்து வைக்கும் இந்தியர்களின் மனப்பான்மையே பொருளாதார மேடு பள்ளங்களில் இருந்து நம் நாட்டைக் காத்து வருகிறது.

கிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்  என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி. மக்களிடம் பெருகி வரும் கன்ஸ்யூமரிசம் என்னும் போக்கு தனி மனித அளவிலும் குழு அளவிலும் கூட நல்லது அல்ல. அளவுக்கதிகமான செலவுகளுக்கு அடிமையாவதே குறுக்கு வழிகளில் பணம் தேடும்படி மனிதனைத் தூண்டுகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img