பாஜக.,வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

இந்தியா சற்றுமுன்

nainar nagendran bjp - 2026

புது தில்லி:

அதிமுக.,வைச் சேர்ந்தவரும் நெல்லை மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றவருமான, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் இன்று தில்லியில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.

முன்னதாக, அமித் ஷா சென்னை வரும் நிகழ்வு திட்டமிடப்பட்டது. அப்போது சென்னையில் வைத்து இந்த இணைப்பு நிகழ்வும் திட்டமிடப்பட்டது. ஆனால், அது தள்ளிப் போனதால் தில்லிக்குச் சென்று அமித் ஷா முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார் நயினார் நாகேந்திரன்.

அவருடன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சீனிவாசன் ,வேலூர் முன்னாள் மேயர் திருமதி கார்த்தியாயினி  ஆகியோரும் பாஜக.வில் இணைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.