ஆட்டமிழக்காத சாதனை படைத்த தோனி

பொது தகவல்கள் விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்ததில் தோனி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி, நேற்றைய இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தனது 300 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 49 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தோனி மேலும் ஒரு புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மென் என்ற புதிய சாதனைதான் அது. அவர் 73 இன்னிங்ஸ்களில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார். தோனிக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் பொல்லாக் மற்றும் இலங்கையை சேர்ந்த சமோந்தா வாஸ், ஆகியோர் 72 முறை ஆட்டமிழக்காமல்(நாட் அவுட்) இருந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மைக்கேல் பெவன் 67 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.