சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை; விஜயவாடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இந்தியா கிரைம் நியூஸ்
death sentence in vijaywada - 2026

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பெண்ட்டையா வுக்கு விஜயவாடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணா மாவட்டம் கொல்லப்பூடியில் சென்ற ஆண்டு மைனர் சிறுமி வன்முறை கொலை வழக்கில் விஜயவாடா ஸ்பெஷல் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ட்டையாவை குற்றவாளியாக முடிவுசெய்து மரண தண்டனை விதித்துள்ளது.

2019 நவம்பர் 10ம் தேதி கொல்லப்புடி நல்லகுண்டாவுக்கு பெண்ட்டையா என்பவன் மகள் உறவு உள்ள 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதன் பின் அவளுடைய உடலை சாக்கு பையில் திணித்து மனித சஞ்சாரமற்ற இடத்தில் வீசி எறிந்து உள்ளான்.

சிறுமி காணாமல் போனதால் பெற்றோர் சுற்றுப்புறமெங்கும் தேடியபோது பெண்ட்டையாவும் அவர்களோடு கூட தேடியுள்ளான். சாக்குப்பையில் சுற்றி குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரித்தனர். பெண்ட்டையா மீது சந்தேகம் ஏற்பட்டு கேள்வி கேட்டு விசாரிக்கவே தானே குற்றம் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளான்.

அதனால் போலீசார் அதன் மீது சர்ஜ்ஷீட் தாக்கல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். 35 பேர் சாட்சியங்களை விசாரித்த பின் கோர்ட் அவனை குற்றவாளியாக முடிவு செய்தது. நீதிமன்றம் விதித்த பல்வேறு பிரிவுகளின் மீது குற்றவாளிக்கு 7 ஆண்டுகள், 20 ஆண்டுகள், ஆயுள் கைதி, மரண தண்டனை விதித்துள்ளதாக ஸ்பெஷல் பப்ளிக் பிராசிகியூட்டர் நாராயண ரெட்டி தெரிவித்தார். மரண தண்டனையை ஹைகோர்ட் இன்னும் தீர்மானம் செய்ய வேண்டி உள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது சிறுமியின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர். பெரியப்பா என்று அன்போடு அழைத்த தன் மகளை விழுங்கிய பெண்ட்டையாவுக்கு கோர்ட்டு தகுந்த தண்டனை விதித்துள்ளது என்று சிறுமியின் தந்தை கூறினார். பெண்ட்டையாவின் மனைவிகூட மரண தண்டனையை வரவேற்பதாக கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.