வீட்டில் அலுவலகம்: செலவிற்கு பணம் கொடுக்கும் பேஸ்புக் நிறுவனம்!

உலகம் சற்றுமுன் தொழில்நுட்பம்
facebook under watch

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளதால், பொருளாதார தேக்கநிலையும் உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளன. அதன்படி பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறோம்.

இத்துடன், வீட்டில் அலுவலகம் அமைக்க தேவையான செலவுகளுக்காக கூடுதலாக ரூ.74,950 ஆயிரம் ஊழியர்களுக்கு நாங்கள் வழங்க இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.