கேரளாவில் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம்!

கேரள மாநிலப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை, மலையாளம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்’ என, மாநில அரசு, அவசர சட்டம் இயற்றியுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. ’மாநிலத்தில், பல பள்ளிகளில் மலையாளம்கற்பிக்கப்படுவதில்லை;
மலையாளத்தில் மாணவர்கள் பேசுவதற்கும், தடை விதிக்கப்படுகிறது’ என, அரசுக்கு அதிகளவில் புகார்கள் வந்தன.
இதையடுத்து, மாநிலத்தில், 10ம் வகுப்பு வரை, மலையாளத்தை கட்டாய பாடமாக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, அவசர சட்டம் கொண்டு வரவும் முடிவு செய்தது.
திருவனந்தபுரத்தில், சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு, கவர்னர் சதாசிவம், நேற்று ஒப்புதல் அளித்தார்.
இது பற்றி, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
வரும் கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளுக்கும், இந்த சட்டம் பொருந்தும். மேலும், சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், 10ம் வகுப்பு வரை, மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.
எனினும், மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மலையாளம் கட்டாயபாடமாக இருக்காது. மலையாளம் கற்பித்தால் மட்டுமே, பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.
மலையாளத்தில் மாணவர்கள் பேசுவதற்கு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தடையும் விதிக்கக் கூடாது. இதை மீறும் பள்ளிகளின் முதல்வர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories