12ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் புதுவிளக்கம் அழகான பெண்ணின் உடலமைப்பு எது? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'சிபிஎஸ்இயுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் சிலவற்றில் நடத்தப்படும் ‘ஹெல்த் அண்ட் பிசிக்கல் எஜூகேசன்’ என்ற பாடப்புத்தகத்தில், ‘36-24-36’ என்ற அளவுதான் அழகான பெண்ணின் உடல் அமைப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை நீக்க வேண்டும் என சமூக இணையதளங்களில் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த நியூ சரஸ்வதி ஹவுஸ் என்ற புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள ‘ஹெல்த் அண்ட் பிசிக்கல் எஜூகேசன்’ என்ற புத்தகத்தை டாக்டர் வி.கே.சர்மா என்பவர் எழுதியுள்ளார். சிபிஎஸ்சிஇயுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் சிலவற்றில் இந்த புத்தகம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில், ‘சைக்காலஜி மற்றும் விளையாட்டு’ என்ற பிரிவு உள்ளது. இந்த பாடத்தில் பெண்களின் உடல் அளவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ‘36-24-36’ என்ற அளவுதான் பெண்களின் சிறந்த உடல் அமைப்பு.
உலக அழகி போட்டிகளில் இந்த அளவுதான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதி தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



