மனைவி இறந்து ஒரு மாதம்.. மச்சினிச்சியை மணமுடிக்க கேட்ட மாப்பிள்ளை! தலையைச் சீவிய மாமனார்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
murder-2-1

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் வசிக்கும் சூர்யநாராயணா என்ற நபர் ஒருவர் லட்சனா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யநாராயணாவின் மனைவிலட்சனா இறந்துவிட்டார். ஆனால் இவரது இறப்பில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து சூர்யநாராயணா மனைவி இறந்த அடுத்த சில நாட்களில் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தனது மாமனாரிடம் இதுகுறித்து கேட்டு உள்ளார்.

ஆனால் மாமனார் இதை கேட்டு ஆத்திரம் அடைந்து திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் சூர்யநாராயணா விடாமல் மாமனாரிடம் திருமணத்திற்கு வற்புறுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறிய மாமனார் மருமகனின் தலையை அரிவாளால் சீவி அந்த தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துவிட்டார். இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.