காணாமல் போன17 வயது சிறுமி.. திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்! இளைஞர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0811_135938

சென்னை புளியந்தோப்பு நாச்சாரம்மாள் லைன் பகுதியை சேர்ந்தவர் இர்பான். இவரது 17 வயதுடைய மகள் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் 28 – ம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடிவந்தனர். இந்நிலையில் புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய தேவஅருள் என்ற இளைஞர் சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது. இதனையடுத்து தேவ அருளைக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.