அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்பு வழிபாடு

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் தமிழகம்

அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்புவழிபாடு

அறந்தாங்கி அருகே தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது.

அறந்தாங்கி அருகே தீயத்தூரில் பிரசித்தி பெற்ற சகஸ்ர லட்சுமீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம் செய்து அபிஷேகம் செய்யப்பட்டது

முன்னதாக கோயிலில் வாஞ்சா கணபதி,வள்ளி தேவசேனா சுப்ரமணியசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து நடந்த சிறப்பு வழிபாட்டில் ஹோமம் செய்து கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டபுனித நீர் மூலம் சகஸ்ர லட்சுமீஸ்வரம் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது இந்த வழிபாட்டில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர்; வழிபட வேண்டியகோயிலாக இருப்பதால் அந்நட்சத்திரத்தில் பிறந்தோர் திரளான கலந்து கொண்டு வழிபாடுசெய்தனர்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.