
ஏ.டி.எம். இயந்திரங்கள் பரவ தொடங்கியதும், வங்கி சேவைகள் பெருமளவு எளிதாகி விட்டன. கிராமங்களிலும் கூட மக்கள் எளிதில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் அளவிற்கு இந்தியா முழுவதும் ஏ.டி.எம். இயந்திரங்கள் பரவியுள்ளன.
விஜய்காந்த், வீடு தோடி ரேஷன் பொருட்கள் வரும் என்று தேர்தல் வாக்குறுதியாக சொன்ன போது சிரித்த மக்கள், ஜெகன் மோகன் ரெட்டி அவருடைய மாநிலத்தில் அதை செயல்படுத்திய போது வாய்பிளந்து கைதட்டினார்கள்.
இணையதளங்களின் பயன்பாடும், வேகமும் அதிகரித்துள்ள நிலையில், எளிதில் ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், உணவு என வீடு தேடி மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன
தற்போது வங்கி சேவைகளும், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணமும் வீடு தேடி வரும் அளவிற்கு சில வங்கிகள் தங்களது சேவைகளைத் தருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ வங்கி, தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று, வங்கி சேவைகளை வழங்கி வருகின்றது. அதெல்லாம் சரி இது போன்ற சேவைகளால், இனி வாடிக்கையாளர்கள், வங்கிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களது வீட்டிலிருந்தபடியே பண பரிவர்த்தனை உட்பட பிற வங்கி சேவைகளையும் எளிதாக பெற முடியும்.
எளிதில் இந்த சேவையை பெறுவதற்காக ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள், https://bank.sbi/dsb என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். 1800 1037 188 அல்லது 1800 1213 721 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு கால் செய்தும் இந்த சேவையப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். உங்களது அழைப்பு சரிபார்க்கப்பட்டு பின்னர், உங்களது கோரிக்கைக்கு ஏற்ப வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த முறையின் கீழ், வாடிக்கையாளர்கள் என்னென்ன சேவைகளைப் பெற முடியும் என்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்
Doorstep Banking services by Canara Bank!
— Canara Bank (@canarabank) January 16, 2021
Register now by calling 1800 10 37 188 or 1800 12 13 721 or visit https://t.co/drt13AM2fk or download DSB mobile app.#DoorstepBanking @DFS_India pic.twitter.com/4Zi3W0SqjN
தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றுக் கொள்ளுதல், காசோலை பெற்றுக் கொள்ளுதல், காசோலை விண்ணப்பித்தல், பார்ம் 15H, டெலிவரி டிராப்ட்ஸ், டெர்ம் டெபாசிட் டெலிவரி, லைஃப் சர்டிபிகேட், கேஓய்சி ஆவணங்கள் பெற்று கொள்ளுதல் உள்ளிட்ட பல சேவைகளை இந்த திட்டத்தின் கீழ் வீட்டிலிருந்த படியே பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சேவைகளை 1800111103 என்ற இலவச அழைப்பு மூலம் கால் செய்து, காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் உங்களது வங்கிக் கணக்கு உள்ள கிளையில் பதிவு செய்த பிறகு பெற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் வீடு தேடி வரும் இந்த சேவைகளுக்கு கணிசமான கட்டணமும் உண்டு.
எஸ்பிஐ வங்கியின் இந்த வீடு தேடி வரும் சேவைகளில் பணம் டெபாசிட் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் 75 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணங்கள் உண்டு. கேஸ் பேமென்ட்/பணம் எடுப்பதற்கு 75 ரூபாய் +ஜிஎஸ்டி கட்டணம் உண்டு காசோலையை பெற்றுக் கொள்வதற்கு 75 ரூபாய்+ஜிஎஸ்டி. காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கும் கோரிக்கைக்கான ஆவணத்தினை பெறுவதற்கும் குறைந்த பட்சமாக 75 ரூபாய் +ஜிஎஸ்டி. டெர்ம் டெபாசிட் ஆலோசனை & சேமிப்பு கணக்கிற்கான ஸ்டேட்மெண்ட் (இலவசம்) நடப்பு கணப்பு ஸ்டேட்மெண்ட் 100 ரூபாய் + ஜிஎஸ்டி. பணம் எடுத்தாலும் சரி, போட்டாலும் சரி அதிகபட்சம் 20,000 ரூபாய் மட்டும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்த சேவையை, வங்கிக் கிளையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் கட்டாயம் இருக்க வேண்டும்.
Your bank is now at your doorstep. Register for doorstep banking today!
— State Bank of India (@TheOfficialSBI) January 16, 2021
To know more: https://t.co/m4Od9LofF6
Toll-Free no. 1800 1037 188 or 1800 1213 721#DoorstepBanking #DSB #Banking #CashWithdrawal pic.twitter.com/HzHFivHxaf
தனிநபர் கணக்கு வைத்திருக்காமல் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அவர்களுக்கு இந்த வீடு தேடி வரும் சேவை என்பது கிடையாது. அதே போல் மைனர் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும் இந்த சேவை கிடையாது. குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அவர்களுக்கு காசோலை மூலம் பணம் எடுக்க அனுமதிக்கப்படும். பாஸ் புத்தகம் மூலம், திரும்ப பெறும் படிவத்தினை பயன்படுத்தியும் பணம் எடுக்க அனுமதிக்கப்படும்.
PSB Alliance Doorstep Banking Services available!! Improved access for hassle-free and convenient Banking. A citizen friendly initiative!
— Bank of India (@BankofIndia_IN) January 14, 2021
Link for Door Step Banking: https://t.co/laVv3iPb1j@DFS_India pic.twitter.com/PK6QLD4zxq
எஸ்பிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட சில வங்கிகளும் இந்த வங்கி சேவையை வழங்கி வருகின்றன.