எஸ்பிபி சீக்கிரம் குணமடைய… ரஜினி உருக்கமான வாய்ஸ்!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை
rajinikanth
rajinikanth

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப் பட்டுள்ள நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர சிகிச்சையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் உள்ளார்.

பாடகர் எஸ்பிபி தமிழ், தெலுகு, கன்னட ஹிந்தி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர். அவருக்காக ரசிகர்கள் பலரும் பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா தனது நெஞ்சார்ந்த ஆசையை வெளிப்படுத்தி, சீக்கிரம் எழுந்து வா பாலு என ஒரு வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்தும், தன் குரலை வெளிப்படுத்தி, டிவிட்டர் பதிவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்….

50 ஆண்டுகளுக்கும் மேல இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன் இனிமையான குரலால் பாடி, கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்புக்குரிய எஸ்பிபி அவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, அபாயக் கட்டத்தை தாண்டிட்டாரு என்று கேள்விப் பட்டதுல, எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சைல இருக்கிறார். எஸ்பிபி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. என்று ரஜினி தனது டிவிட்டர் விடியோவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.