‘மஜா’வுக்கென்றே தொடங்கிய மசாஜ் சென்டர்! இளைஞர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
ambhathur

அம்பத்தூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தியது தொடர்பாக இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பத்தூர், ஒரகடம், வடிவேல்முதலி தெருவில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இதை சென்னை, வண்ணாரப்பேட்டை, வ.உ.சி நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.

sathish

இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 5 இளம் பெண்களை மீட்டு, மயிலாப்பூரில் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

masaj-center

அதன்பிறகு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.