அரசு பள்ளி கணினி ஆசிரியர் பட்டியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு

உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 652 கணினி பயிற்றுநர்களை (கணினி ஆசிரியர்) நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் இறுதி  பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. பணிநியமன ஆணை விவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் அறிவிக்கப்படும். இதேபோல், முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 10-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. பிப்ரவரி 25-ம் தேதி முதுகலை பட்டதாரி தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், உடற்கல்வி இயக்குநர் தேர்வு முடிவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.