ஜூன் 15 – உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் காலை நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில் “முதியோர்களை பாதுகாப்போம்” என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஒரு உறுதிமொழியை அனுப்பியுள்ளது.
அந்த உறுதிமொழி:
முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் இசை வாய்மொழியாகவோ வன்முறை மூலமாகவோ பொருளாதார ரீதியாகவும் எந்த உருவில் வந்தாலும் அவற்றைக் களைவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறுகிறேன்
ஒரு முதியவர் கொடுமைப்படுத்தப்படுவதை நிலையிலேயே கண்டுபிடித்து தலையிட்டு தடுக்கவும் அரவை நீக்கவும் என் சொந்த முயற்சியாலும் தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்
மேலும் அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் அதாவது உடல் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அன்பு மற்றும் மன வளத்துக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றை தடுத்து பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறேன்




