இலங்கை குண்டுவெடிப்புகளில் கோவை இளைஞருக்கும் தொடர்பு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

nia office - 2026

கோவையில் நடைபெற்ற சோதனையில் இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. கூறியுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை கோவை பகுதியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை மற்றும் தேடுதலில், 14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதை அடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

”உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதின் இலங்கை குண்டுவெடிப்பை நடத்திய ஸக்ரான் ஹசீனுடன் சமூக வலைதளம் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும், சமூக வலைதளம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு,ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

nia statement - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.