December 6, 2025, 8:15 AM
23.8 C
Chennai

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி”(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி”

(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)

கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி 19059744 1596770400368119 8664418595669274017 n - 2025

புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம்.

அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத் தியானித்துக் கொண்டு இருப்பவர். அவருக்கு இரண்டு பெண்கள். அங்கே தன் பெண் ஒருத்தியுடன் வருகிறார். இங்கே வந்த இரண்டாவது பெண் எம்.ஏ. வரை படித்து வேலையில் இருப்பவள்.

திடீரென ஒருநாள் இந்தப் பெண்ணுக்கு சித்தப்பிரமை பிடித்துவிட்டது. முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாள். அவள் வயதுக்கேற்ற பேச்சு இல்லை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாள்,நடந்து கொள்கிறாள். இவ்வளவு இளம் வயதில், அதாவது திருமணம் செய்யப் போகும் வயதில் ஒரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டால். எந்ததாய்தான் கவலைப்பட மாட்டாள்?

தாய், பெரிய டாக்டர்கள் எல்லோரிடமும் மகளை அழைத்துப் போனார். மாறி…மாறி பல சிகிச்சைகள் தொடர்ந்து நடந்தன. எந்த வைத்தியத்திலும் பலனே இல்லை.

“நீங்கள் உங்கள் மகளை வேலூருக்கு அழைத்துப்போய் அங்கே மூளையில் ஒரு ஆபரேஷன் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று ஒரு வைத்தியக் குழுவே அந்த அம்மாளிடம் சிபாரிசு செய்தனர்.அப்படிச் செய்ய அந்தத் தாய்க்கு மனம் இல்லை.

சதா சர்வகாலமும் காஞ்சிமகானே கதி என்று இருந்தவர், வைத்தியர்கள் இவ்வாறு சொன்னவுடன், காஞ்சி மகானிடம் போய் முறையிட நினைத்து தன் மகளுடன் காஞ்சிக்கு வந்தார். அன்று இரவு அவர்களுக்கு மகானின் தரிசனம் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் ,”ஜய ஜய சங்கரா, ஹர ஹர சங்கரா” வாய் ஓயாமல அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர்.

நினைவே இல்லாமல்,அந்தப் பெண் கத்திக் கத்தி மயக்கமடைந்து விழுந்துவிட்டாள்.

மறுநாள் மகானின் தரிசனம் கிடைக்கவே, அந்த தாய், சர்வேஸ்வரனிடம் தன் மனக்குமுறலை கதறித் தீர்த்து விட்டாள்.

மகானின் அருள் கடாக்ஷம் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவே மூன்றாவது நாள் தரிசனம் செய்ய வந்தாள்.

மகாபிரபு அவளை நோக்கி உற்றுப் பார்த்து, “அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி” என்று உத்தரவு போட்டது போலச் சொன்னார்.

அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

மகானின் திருவடியை தரிசனம் செய்த வண்ணம்,அந்தப் பெண் அபிராமி அந்தாதியைச் சொல்லஆரம்பித்துக் கொண்டிருக்கும்போது இடையில் மயக்கமடைந்தாள். சற்று நேரத்தில் மயக்க நிலை தெளிந்து சகஜமாக இருக்க ஆரம்பித்தாள். அவளுக்கு உடம்பில் அசதி இருந்ததே தவிர, அவள் அப்போதே பூரண குணமடைந்து விட்டாள்.தாய் அடைந்த ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

“மகாபிரபு” என்று இருவராலும் அலறத்தான் முடிந்தது.

குரு கடாக்ஷம் நம்மீது படுவதற்கு நாம் எந்தத் தவமும் செய்ய வேண்டியதே இல்லை.சதா அவரது நினைவாகவே இருந்து நமது மனதை அவரிடம் சமர்ப்பித்து விட்டால் அதுவே போதும். குரு நம்மை ஆட்கொண்டு நமது லௌகீகத்தைப் பார்த்துக் கொள்வார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories