எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்
spbalasubramanian
spbalasubramanian

எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை அபாயகரமாக உள்ளதாகத் தெரிகிறது. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

கொரோனா தொற்று பாதித்ததால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. அண்மையில் கொரோனாவில் இருந்து அவர் குணம் அடைந்தார் என்று மருத்துவமனை அறிவிப்பில் வெளிவந்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

ஆனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும் பிற உடல்நிலைப் பிரச்சனைகள் அவருக்கு இருந்தன. இந்த மாதம் 19 ம் தேதியிலிருந்து அவருடைய உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை அதிகாரிகள் எப்படிப்பட்ட ஹெல்த் புல்லெடினும் வெளியிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆயினும், ”உணவு எடுத்துக் கொள்ளும் எஸ்.பி.பி., விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார்,” என்று அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. எக்மோ உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவரது உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

சற்று நேரத்தில் எஸ் பி பி யின் உடல் நிலை குறித்து ஹெல்த் புலெடின் வெளியிட உள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது. எஸ்பி பாலுவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் மீண்டும் கவலை அடைந்து உள்ளார்கள்.

கடந்த இருபத்தி நாலு மணி நேரங்களாக அவருடைய உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளதாகவும் மேலும் நிலைமை அபாயகரமாக உள்ளதாகவும் தெரிகிறது. எஸ்பி பாலசுப்ரமணியத்தைப் பார்க்க கமலஹாசன் சென்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.