தொழில் முடக்கம்: வழக்கறிஞர்களுக்கு அரசு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்!

அடடே... அப்படியா? கோவை சற்றுமுன் தமிழகம்
hindu-lawyers-meet
hindu-lawyers-meet

ஹிந்து வழக்கறிஞர் முன்னணி மாநில கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் திரு முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சென்னை உயர்நீதிமன்ற மத்திய அரசு அசிஸ்டன்ட் சொலிசிட்டர் ஜெனரல் திரு கார்த்திகேயன் ஜி நிறைவுரை ஆற்றினார். நெல்லை குமரி தூத்துக்குடி மதுரை சென்னை திருப்பூர் கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

hindumunnani-lawyers-meet
hindumunnani-lawyers-meet

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) கொரானோ தொற்றால் தொழில் முடக்கத்தால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தமிழக அரசு ஒரு லட்சம் வட்டி இல்லா கடன் வழங்க வலியுறுத்தப்பட்டது.

2 )ஒரு வழக்கறிஞர் இறந்தால் வழங்கப்படும் சேமநல நிதியை 20 லட்சமாக உயர்த்த வலியுறுத்தியும்

3) அனைத்து வழக்கறிஞர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ESI மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும்

4) இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலய சொத்துக்கள் குறித்து மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த ஆலய சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்

5) நாட்டின் நீண்ட கால பிரச்சனையாக இருந்த ராமஜென்மபூமி விவகாரத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அருமையானதொரு தீர்ப்பை வழங்கியது அந்த தீர்ப்பை கண்டித்தும் நீதித்துறையை விமர்சனம் செய்தும் பல்வேறு அமைப்புகள் சுவரொட்டிகள் ஓட்டுவதும் காழ்ப்புணர்ச்சியோடு கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துப் பேசுவதும் வேதனைக்குரியது அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து நீதித்துறையின் மாண்பை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டம் வலியுறுத்துகிறது

6) கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி அப்பாவி பொதுமக்கள் பலரைப் படுகொலை செய்த கோவை பாஷா உள்ளிட்ட பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ளனர் அவர்களை விடுவிக்க கோரி சில இஸ்லாமிய அமைப்புகள் நீதித்துறையையும் சிறைத் துறையையும் தமிழக அரசையும் மிரட்டும் வகையில் சிறை முற்றுகை போராட்டம் நடத்துவது மிகுந்த அபாயகரமானது தமிழக அரசு இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.