மத்தாப்பு, கேப் வெடிகளை தனித் தனியாக வைத்து விற்பனை செய்ய வேண்டும்!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்
crackers
crackers
  • மத்தாப்பு, கேப் வெடிகளை தனித்தனியாக வைத்து விற்பனை செய்ய வேண்டும்….
  • பட்டாசு விற்பனை கடைகளுக்கு, பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்…..

விருதுநகர் : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் பகுதிகளிலும், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் திறக்கப்பட்டு, பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.

பட்டாசு விற்பனை கடைகளில் பாதுகாப்பு மிக முக்கியமானது. கடைகளில் மத்தாப்பு, கேப் போன்றவற்றை தனியிடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

வெடிகள், சரவெடிகள், வானவெடிகள், புஸ்வானம் வகைகள் வைத்திருக்கும் பகுதிகளில், மத்தாப்புகளை வைத்திருக்கக் கூடாது.

கடையின் உள்ளே வாடிக்கையாளர்களை அதிகளவில் நிற்பதற்கு அனுமதிக்க வேண்டாம்.

சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணிகளை வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரங்களில் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை, தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், பட்டாசு விற்பனை கடைக்காரர்களுக்கு வலியுறுத்தி கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.