டீ கடைக்காரராக இருந்து பிரதமராக உயர்ந்த மோடி: இவான்கா பெருமிதம்!

இந்தியா சற்றுமுன்

ஹைதராபாத்:

டீக்கடைக்காரராக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடி, சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று மோடிக்கு பாராட்டு தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு துவங்கியது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். விழாவில் இவாங்கா பேசியபோது:

தேநீர் விற்பனையாளராக இருந்து, நாட்டின் பிரதமராக மோடி உயர்ந்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பாக அவர் பணியாற்றி வருகிறார்.

எனக்கு உத்ஸாக வரவேற்பு அளித்த இந்திய மக்களுக்கு நன்றி. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் உலகளவில் பல கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்தியா மிக உண்மையான நட்பு நாடு என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் ஹைதராபாத் நகரில உலக தொழில் முனைவோர் மாநாடு நடந்து வருகிறது. அமெரிக்க மக்களின் கனவை நனவாக்கும் பணியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்… என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.