ரங்கநாயகித் தாயார் ஊஞ்சல் உத்ஸவம் கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்
sriranganayagi-thayar-oonjal-utsav
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் டோலோத்ஸவம் மூன்றாம் நாள் சேவை… 16.11.2020

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் உத்ஸவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்று அழைக்கப்படுகிறது. ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் உத்ஸவம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த உத்ஸவம் வரும் 20 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. ஊஞ்சல் உத்ஸவத்தின் போது, மாலை 5.30க்கு ரங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் உத்ஸவம் கண்டருளினார். பின் 8.45க்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஊஞ்சல் உத்ஸவ நாட்களில் மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூலவர் சேவை கிடையாது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.