திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் உத்ஸவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்று அழைக்கப்படுகிறது. ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் உத்ஸவம் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த உத்ஸவம் வரும் 20 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. ஊஞ்சல் உத்ஸவத்தின் போது, மாலை 5.30க்கு ரங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் உத்ஸவம் கண்டருளினார். பின் 8.45க்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஊஞ்சல் உத்ஸவ நாட்களில் மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூலவர் சேவை கிடையாது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.