புதுக்கோட்டையில் மீட்புக் குழுப் பணிகள் குறித்து ஆய்வு!

உள்ளூர் செய்திகள் திருச்சி
251-aranthangi
251-aranthangi

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் போலீஸ் நிலையத்தில் மீட்பு குழுக்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து எஸ்பி ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் உள்ள புயல் மீட்பு குழுவினரை புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு புயல் நேரத்தில் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் உபகரணங்கள் குறித்தும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ள ஜேசிபி மற்றும் ஜெனரேட்டர்களை பார்வையிட்டார்

அப்போது அறந்தை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தங்கத்துரை மீட்பு உபகரணங்கள் ரூ.30 ஆயிரம் மதிப்பிலும் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதிமோகனகுமார் 5 பேர்களுக்கு மழைகோட்டும் வழங்கினார்

ஆய்வின்போது ஏடிஎஸ்பி ராசேந்திரன் டிஎஸ்பி ஜெயசீலன் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் சப் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு போக்குவரத்து பிரிவு ஸ்டீபன் உட்பட பலர் உடனிருந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.