இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50; தப்ளிக் – 48; உயிரிழப்பு 6 ஆக உயர்வு!

Published:

beela rajesh - 2026
file picture

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 50 பேரில் தில்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் 48 பேர் என்று தமிழக சுகாதாரச் செயலர் பியூலா ராஜேஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 57 வயது பெண்மணி கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். இன்று பாதிப்புக்கு உள்ளான 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறைச் செயலர் பியூலா ராஜேஷ், கொரோனா பாதிப்பில், வீட்டுக் கண்காணிப்பில் 91,851 பேர் இருப்பதாகவும், அரசின் தனிமைப்படுத்தல் முகாம்களில் 205 பேர் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், 1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்றும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியுள்ளது என்றும் தெரிவித்த பியூலா ராஜேஷ், இன்று மட்டும் 50 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களில் அதில் 48 பேர் தில்லி தப்ளிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மதுரையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நேர்ந்த நிலையில் நேற்று தேனி, விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 75 வயது முதியவர், சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.3ம் தேதி அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது.

அதேபோல் சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (ஏப்.5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் இன்று உயிரிழந்தார். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரொனா பாதிக்கப் பட்டிருப்பவர்கள் பட்டியல்!

தமிழகத்தில் மொத்தம் 621 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சென்னை – 110
கோயமுத்தூர் – 59
திண்டுக்கல்-45,
திருநெல்வேலி-38,
ஈரோடு-32,
திருச்சி-30,
நாமக்கல்-28,
ராணிப்பேட்டை-25,
செங்கல்பட்டு-24,
கரூர்-23,
தேனி-23,
மதுரை-19,
விழுப்புரம்-16,
கடலூர்-13,
சேலம், திருவள்ளூர், திருவாரூரில் தலா-12,
திருப்பத்தூர், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் தலா-11,
திருவண்ணாமலை-9,
தஞ்சாவூர்-8,
திருப்பூர்-7,
கன்னியாகுமரி, காஞ்சிபுரத்தில் தலா-6,
சிவகங்கை, வேலூரில் தலா-5,
நீலகிரி-4,
ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா-2,
அரியலூர், பெரம்பலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img