என்னை மன்னித்து விடுங்கள் ஸ்நேகா: பகிரங்கமாகக் கேட்ட மோகன் ராஜா

சினி நியூஸ் சினிமா

மோகன்ராஜா இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் இயக்கிய வேலைக்காரன் இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில், சினேகா வரும் காட்சிகள் சில நிமிடங்களே வந்ததால் வருத்தத்தில் பொங்கித் தீர்த்தார் ஸ்நேகா. அதற்காக இயக்குனர் மோகன்ராஜா மன்னிப்பு கோரியுள்ளார்.

அண்மையில் திரைக்கு வந்த வேலைக்காரன் படம், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் நடித்து, மோகன்ராஜா இயக்கி வெளிவந்தது. இந்தப் படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு மிகப் பெரிய சமூகச் செய்தியைச் சொல்ல தன்னை வருத்தி நடித்திருந்தார் ஸ்நேகா. 18 நாட்கள் ஸ்னேகாக நடித்துக் கொடுத்திருந்தும், படத்தில் வந்ததென்னவோ சில நிமிடக் காட்சிகள் தான். இதனால் ஸ்னேகா வருத்தத்துடன், தனக்கு இது போல் இதுவரை அவமானம் நேர்ந்ததில்லை, என் வாழ்நாளில் நான் அடைந்த பெரிய அவமானம் இது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காட்சிகள் குறைக்கப்பட்டதற்காக இயக்குனர் மோகன்ராஜா, ஸ்னேகாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது…

ஸ்னேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. அவரது காட்சிகள் மட்டுமல்ல வேறு சிலரின் காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு உண்டு. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யவில்லை. கதைப்படி ஸ்னேகாவின் கதை 90 நாள் நடப்பதாக இருக்கும், இதற்காக நிறைய காஷ்ட்யூம் அணிந்து அவர் நடிக்க வேண்டியிருந்தது.

முகத் தோற்றத்திலும் நிறைய மாறுதல் காட்ட வேண்டியிருந்தது. அவரது காட்சிகள் பெரும்பாலும் மாண்டேஜ் டைப்பிலானது. இதற்காகத்தான் அவர் அதிக நாள் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றைக்கு அவரது கேரக்டர் தான் முதலில் பேசப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றாலும் நாங்கள் தவறு செய்திருப்பதாக ஸ்னேகா கருதினால் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.