நடிகை திரிஷா தனது சம்பளத்தை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 16 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார் திரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தற்போதும் வைத்திருக்கிறார். தற்போது பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியின் ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படம் தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அவர் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொள்ள தயார் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மேலும் அவர் முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். திரிஷாவின் இந்த சம்பள குறைப்பு அறிவிப்பு சக நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.



