தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்றால்…?

உரத்த சிந்தனை புகார் பெட்டி

தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்று சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல… அதை ‘சொல்பவர்களின் விருப்பம்’ என்று எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான்..

ஒரு நாட்டின் குடிமகனுக்கு. அரசியல் சாசனம் சொல்லும் தகுதிகள் இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டில் எந்த இடத்திலும் அரசியல் செய்ய உரிமை உள்ளது

இந்த மாநிலத்தில் பல்லாண்டுகளாக வசித்து மக்கள் செல்வாக்கு பெற்று மக்கள் நலனை மட்டுமே யோசிக்கிற எவருக்கும் அரசியலில் ஈடுபட, தேர்தலில் பங்கேற்க ஆட்சியில் இடம் பெற உரிமை உண்டு..

அவர்களை தேர்ந்தெடுப்பதும் தேர்ந்தெடுக்காததும் வாக்காளர்களின் விருப்பம்..

தமிழர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று அரசியலில் இறங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்ப டும்போது மட்டும், தமிழனின் சாதனை பாரீர் என்று பெருமை பேசுவதில்லையா..

வெளி மாநிலங்களில் தலைமுறை தலைமுறையாய் வசித்து. மக்கள் செல்வாக்கு பெற்ற தமிழர்களை, ‘அரசியலில் நீங்கள் நுழைய உரிமையே கிடையாது” என்று அங்கே இருப்பவர்கள் சொன்னால் உங்கள் பதில் என்னவா இருக்கும்?

  • கருத்து: பத்திரிகையாளர் ஏழுமலை வேங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.