தை அமாவாசை… மதுரை -ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள்!

அடடே... அப்படியா? பொது தகவல்கள் மதுரை
19 June10 Train

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

வண்டி எண் 06091 மதுரை – ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து புதன்கிழமை (10.02.2021) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.

மற்றொரு சிறப்பு ரயில் வண்டி எண் 06097 மதுரை ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து வியாழக்கிழமை (11.02.2021) அன்று காலை 06.45 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06092 ராமேஸ்வரம் – மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (11.02.2021) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மற்றொரு சிறப்பு ரயிலான வண்டி எண் 06098 ராமேஸ்வரம் – மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (11.02.2021) மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.