டிவிட்டர், வாட்ஸ்அப்க்கு சுதேசிய மாற்று! மோதி அரசின் நெஞ்சுரம்!

உரத்த சிந்தனை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
modi
modi

அமெரிக்க ’ஏகாதிபத்திய’ கார்ப்பரேட்டுகளுக்கு தொடர்ந்து ‘செக்’வைக்கும் மோதி அரசு…!

1, வாட்சாப்புக்கு : “அரசு உடனடி செய்தி அமைப்பு” (Government Instant Messaging System – GIMS) என ஒரு செயலியை பரிசோதித்து வருகிறது அரசு. இது இப்போது குறிப்பிட்ட சில அரசு ஊழியர்களுக்கு மட்டும் பயன்பாட்டில் உள்ளது (https://www.gims.gov.in) . இது முழுதும் பரிசோதிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம் என்கிறது https://tinyurl.com/4pme2f8m . (வாட்சாப் பிரைவசி பாலிஸியை ஒத்திவைத்துள்ளது. வாட்சாப் ஒரு முகநூல் நிறுவனம்).

2, ட்விட்டருக்கு செக்: காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை இயக்கும் சில பன்றிஸ்தான் நாட்டவர் ஐடியை முடக்க சொன அரசிடம், “அது அவர்கள் கருத்து சுதந்திரம்” என்று பதிலளித்த ட்விட்டருக்கு முடிவு கட்ட திட்டம். இந்திய அரசு சட்டத்தையும் பாராளுமன்றத்தையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ட்விட்டருக்கு செக் வைக்க அரசு அமைச்சகங்கள் சிலவும், அமைச்சர்களும் இந்திய சமூகவலைதளம் “கூ” பக்கம் https://www.kooapp.com நகர தொடங்கியிருக்கிறார்கள். ட்விட்டருக்கு இந்திய அரசு தடைவிதிக்க வாய்ப்பு.

3, ட்விட்டருக்கு அரசு கம்பை எடுத்ததை கண்ட கூகுள், கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த டூல்கிட் டாக்குமெண்டை – யார் பகிர்ந்தது, ஐ.பி அட்ரஸ், இமெயில் விவரங்கள், பெயர் உள்ளிட்ட – விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

நினைவிருக்கட்டும் – அமெரிக்க விசா, மாஸ்டர் கார்டு ஆதிக்கத்தை ருபே / யுபிஐ / பீம் கொண்டு வந்து ஒடுக்கியது மோதி அரசு.

அமெரிக்க / ஐரோப்பிய ஃபார்மாக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் ‘ஜெனரிக்’ மருந்துகளை கொண்டுவந்து மக்களுக்கு நல்லது செய்த அரசு மோதி அரசு.

அமெரிக்க / ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனங்களின் (டிஃபன்ஸ்) தடைகளையும் மீறி, பாதுகாப்பு உபகரணங்களில் தன்னிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மோதி அரசு.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை தோற்கடிக்கும் வல்லமை படைத்த கார்ப்பரேட்டுகளின் மிரட்டல் உருட்டல்கள் மோதி அரசிடம் செல்லாது.

மைக்ரோ சிப் உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது அரசு. இந்தியாவுக்கென தனியான ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பரிசோதனையில் உள்ளது.

வியாபாரம் செய்ய வந்து ஆதிக்கம் செலுத்தும் வெள்ளைக்காரனின் கிழக்கிந்திய கம்பெனி புத்தி மாறப் போவதில்லை. சுயசார்பு ஒன்றே தீர்வு.

அமெரிக்க / ஐரோப்பிய இடதுசாரி அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள் (அமேசான், ட்விட்டர், முகநூல், கூகுள், ஃபார்மா, டிஃபன்ஸ், வங்கிகள்… ), என்.ஜி.ஓ கூட்டம், ஊடக கூட்டங்கள், துருக்கி, கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டம், சீனா என அத்தனை பேரும் இந்தியாவை குறிவைத்து தாக்கும் போது, அவற்றை தனி மனிதராக எதிர்த்து நிற்கிறார் பிரதமர் மோதி என்பதை காட்டும் விவாதமாக நெதர்லாந்து தூதுவர் Fons Stoelinga ட்விட்டரில் பகிர்ந்திருப்பது சிறப்பு.

கட்டுரை: செல்வநாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.