June 23, 2021, 10:36 am
More

  ARTICLE - SECTIONS

  இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நானே முதல்வர்: தெளிவுபடுத்திய கேசிஆர்!

  உடலளவிலும் மனதளவிலும் நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன்... ஏதாவது இருந்தால் அனைவருடனும் கலந்து பேசி முடிவு எடுப்பேன்

  telangana-cm-kcr-meeting
  telangana-cm-kcr-meeting

  முதல்வர் பதவி பற்றி முதல்வர் கேசிஆர் தெளிவுபடுத்தினார். உடலளவிலும் மனதளவிலும் நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன் என்றார். ஏதாவது இருந்தால் அனைவருடனும் கலந்து பேசி முடிவு எடுப்பேன் என்றார்.

  மாநில செயல் அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியவர்களின் இடையில் மிக நீண்ட உரையாற்றினார். ஜிஹெச்எம்சி மேயர் பெயர் 11ம்தேதி மூடிய கவரில் தெரிவிப்போம் என்று தெளிவுபடுத்தினார். 80 லட்சம் பேரை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென்று கேசிஆர் குறிப்பிட்டார்.

  “தெலங்காணாவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில சக்திகள் செய்த சதி திட்டங்களை தடுப்பதற்கும் பிறருக்கு எதிரில் தளர்வு ஏற்படக்கூடாது என்ற காரணத்துக்காகவும் தான் நான் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன். தனித் தெலங்காணா மாநிலத்தைப் பெற்ற புகழோடு இதை ஒப்பிட்டால் முதல்வர் பதவி எனக்கு கால் செருப்புக்குச் சமம்.

  பதவியை விட்டு விட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். கட்சியை நடத்துவது வெற்றிலைப் பெட்டியை கையில் பிடிப்பதுபோல் எளிதல்ல. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் கட்சியை நடத்த முடியாது. தலைமைப் பதவிக்கு விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் அரசாங்கத்தை நடத்த இயலும்.

  முன்பு சில தலைவர்கள் 12 கட்சிகளை வைத்து பல அவஸ்தைகள் பட்டாலும் கடைசிவரை அவர்களால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. சோசியல் மீடியாவின் நிலைமை மிகவும் தரித்திரமாக கீழ்மையாக மாறிவிட்டது. அதில் வரும் எதிர்ப்பு பிரச்சாரங்களை திருப்பி அடித்து நேரடியாக பதில் அளிக்க வேண்டும். கட்சிப்பணிக்காக சோசியல் மீடியா கமிட்டிகள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

  தலைமையில் மாற்றம் என்பது இல்லை. இந்த விஷயத்தில் அறிவிப்புகள் செய்யும் எம்எல்ஏக்கள் மற்றும் பிற தலைவர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுத்துக் கொள்வோம்” என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர், முதல்வர் சந்திரசேகரராவ் எச்சரித்தார்.

  telangana-cm-kcr
  telangana-cm-kcr

  உடலளவிலும் மனதளவிலும் ஆலோசனை அளவிலும் தான் முழு அளவு ஆரோக்கியமாக இருப்பதாகவும் மாநில முதலமைச்சராக மேலும் ஒரு பத்தாண்டுகள் தானே இருப்பேன் என்றும் தெளிவுபடுத்தினார்.

  தெலங்காணா பவனில் ஞாயிறன்று நடந்த கட்சியின் மாநில காரிய வர்க்கம், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், இதர முக்கிய மக்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுமார் 2 மணிநேரம் நீண்ட உரையாற்றினார்.

  “இருபது ஆண்டுகளாக பிறருக்கு உதாரணமாக இருக்கும்படி கட்சியை நடத்தி அமைப்பினை வலிமைப் படுத்துவது, அங்கத்தினர்களை சேர்ப்பது, கிராம நிலையிலிருந்து மாநில அளவு வரை கமிட்டிகள் ஏற்பாடு செய்வது போன்ற அம்சங்கள் மீது வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளேன். ஹைதராபாத் மேயர் பெயரை மூடிய கவரில் குறிப்பிடுவோம்”

  “முதலமைச்சரை மாற்றப் போகிறார்கள் என்ற ரீதியில் யாராவது பேசினால் பாறாங்கல்லால் அடிப்பேன். தோலை உரிப்பேன். பழுக்கக் காய்ச்சி சூடு இழுப்பேன். ஒழுங்குமுறையை மீறியவர்களை சும்மா விடமாட்டேன். நேராக வெளியில் அனுப்பி விடுவேன். நீங்கள் அனைவரும் எனக்கு குடும்ப உறுப்பினர்களோடு சமம். ஏதாவது இருந்தால் உங்கள் அனைவரோடும் கலந்து பேசி எந்த மறைவும் இல்லாமல் முடிவு எடுப்பேன்.

  கட்சியை நாம் பாதுகாத்துக் கொண்டால் கட்சி நம்மை பாதுகாக்கும். பார்ட்டி வளமாக இருந்தால்தான் வெளியில் கூட நமக்கு கௌரவம் மரியாதை இருக்கும். இரண்டு முறை உங்களை எம்எல்ஏக்கள் ஆக வெற்றி பெறச்செய்து என் நெஞ்சில் வைத்து காப்பாற்றி வருகிறேன். மீண்டும் வரும் தேர்தலிலும் கூட காப்பாற்றுவதற்கு தயாராக உள்ளேன்.

  எங்காவது போய் பைத்தியக்காரத்தனமாக பேசினால் ஒதுக்கிவைத்து விடுவேன். பத்து பேர் கூடி அடித்தால் பாம்பு சாகாது என்ற பழமொழிபடி சில முறை அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் சர்ச்சை செய்து தீர்மானம் எடுத்துக் கொள்வது இயலாது. உதாரணத்திற்கு 2018 செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 11 மணி வரை நீங்கள் எம்எல்ஏக்கள். மத்தியானம் மாஜி எம்எல்ஏக்கள். மாலையில் நீங்கள் கட்சி உறுப்பினர்கள்.

  சில விதமான முடிவுகள் அனைவருக்கும் சொல்லி எடுத்துக் கொள்வது எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியப்படாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தனித் தெலங்காணா போராட்டக் கட்சியைத் தொடங்கி எத்தனையோ மேடு பள்ளங்களை எதிர்கொண்டு இலக்கை அடைந்து சொந்த மாநிலத்தை சாதித்துள்ளோம். போராட்டத்தின்போது கட்சியை முறியடிப்பதற்கு பலரும் பல விதங்களில் முயற்சி செய்தார்கள்.

  ஆனாலும் திடமான உள்ளத்தோடு நின்று போரிட்டு இலட்சியத்தை சாதித்து மாநிலத்தில் இரண்டு முறை அதிகாரத்திற்கு வந்துள்ளோம். கட்சியை நடத்துவது பான் டப்பா பிடித்ததுபோல் எளிதல்ல. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் கட்சியை நடத்த இயலாது. தலைமை பண்புக்கு விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் நடத்த முடியும். முன்பு ஜனாரெட்டி முதல் விஜயசாந்தி, ஆலெ நரேந்திரா, தேவேந்திரகௌட் கூட 12 கட்சிகள் வைத்து அவஸ்தைபட்டாலும் இறுதிவரை அதைத் தொடர இயலவில்லை” என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-