எம் எஸ் தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
santhip
santhip

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலை இந்திய திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே தோனி படத்தில் சுஷாந்துடன் நடித்த இன்னொரு நடிகரும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

sandeep-1-1
sandeep-1-1

தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘எம்எஸ் தோனி’ படத்தில் சுஷாந்துடன் நடித்தவர் நடிகர் சந்தீப். இவர் நேற்று திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கை மற்றும் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவுகளால் தான் தற்கொலை செய்து கொள்வதாக பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரே படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் அடுத்தடுத்து சில மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சந்தீப் தற்கொலையால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

sandeep-3
sandeep-3

நடிகர் சந்தீப் தற்கொலை குறித்து பாலிவுட் பிரமுகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/nationnext/videos/921612775251997/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.